இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

அஜித்துக்கு சிக்கல் கொடுக்கும் விஷால் – விசுவாசம் வெளிமாநில ஷூட்டிங் ரத்து ஏன்?

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என உத்தரவு போட்டு அஜித்துக்கு சிக்கல் கொடுத்துதுள்ளார் விஷால். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க விஷயங்களில் அஜித் கலந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு சிக்கல் கொடுக்கவே இந்தத் திட்டம் என்கிறார்கள்.

‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. அங்குள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதற்காக செட்டும் போடப்பட்டு வந்தது. இந்நிலையில், 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஷூட்டிங் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்கிற போராட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மார்ச் 16 முதல் தமிழகத்தில் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.


Filed Under: FeaturedLatest News

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.