இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

“தல” அஜித் வைத்துள்ள 2018 புதிய ஹெலிகாப்டரின் ரகசியம்

அஜித் குமாருக்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர் வீட்டில் ரிமோட் மூலம் இயங்ககூடிய சிறிய ரக ஹெலிகாப்பர்களை தயாரிப்பதை பொழுதுபோக்காக செய்து வருகிறார். அவர் செய்த சிறிய விமானம் ஒன்று தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் தல அஜித் தான் புதிதாக வாங்கிய ரிமோட் மூலம் இயங்கும் ஹெலிகாப்டருடன் எடுக்கப்பட்ட படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது.

இந்த சிறிய ரக ஹெலிகாப்டர்கள் பெரிய ஹெலிகாப்டர்கள் இயங்கும் அதே தொழிற்நுட்பத்தில் இயங்குபவை, இதை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தற்போது வெளியான புகைப்படத்தில் அஜித் ஃபிளாக் தண்டர் 700 என்ற ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ஹெலிகாப்டருடன் இருக்கிறார். இந்த ஹெலிகாப்டர் சமீபத்தில் தான் விற்பனைக்கு வந்தது.

 

இந்த ஹெலிகாப்டரில் மேட் பிளாக் ரோட்டார் ஹேட், உயர் ரக கார்பனால் விடிவமைக்கப்பட்ட மேல்புறம் மற்றும் பின்புறம் உள்ள பிளேடுகள், குறைந்த எடை கொண்ட ஹெலிகாப்டர் ரிமோட் மூலம் இயங்கும் பிளாக் தண்டர் 700 ரக ஹெலிகாப்டருடன் தான் அஜித்குமார் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ70,000.


Filed Under: FeaturedLatest News

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.