இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

Summary of Life

அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் ஆசை. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் வெற்றிப்படத்தில் நடித்தார்.


Content Protected Using Blog Protector By: PcDrome.